Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து !

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் வாழ்த்து !

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பெருவெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.

குறிப்பாக , தனது 52 ஆண்டுகால உழைப்பால்., இளைஞர் அணி தலைவர் , சட்டமன்ற உறுப்பினர் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் , எதிர்கட்சித்தலைவர், தி.மு.க. பொருளாளர் , செயல் தலைவர் , தலைவர் , எதிர் கட்சித்தலைவர் , இன்று தமிழக முதல்வர்… என படிப்படியாக உயர்ந்துள்ள மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது மகிழ்ச்சிகரமான
வாழ்த்தினை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறது.

 

உதயநிதி ஸ்டாலினுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்” வாழ்த்து!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் , போட்டியிட்ட முதல் முறையிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார் அவருக்கு நமது 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.

நன்றி!!

D.R.பாலேஷ்வர்,
தலைவர்.

R.S.கார்த்திகேயன்,
செயலாளர்.

மற்றும்
நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள்.

சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை – 24

Related posts

பனாரஸ் ஹீரோ ஜையீத் கான் நம்பிக்கை

Jai Chandran

ஜமா (பட விமர்சனம்)

Jai Chandran

விஷாலை பாட வைத்து சுந்தர் சி,, விஜய் ஆண்டனி கலாட்டா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend