Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் விவேக் மறைவு: நடிகர் நாசர் இரங்கல் செய்தி

நடிகர் விவேக் இன்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு நடிகர் நசர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருதாவது:

அன்பு நண்பர் , சக ஊழியர் கலைமாமணி பத்மஶ்ரீ விவேக் அவர்களது பிரிவு என்னை அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைய செய்துள்ளது..
1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ” மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் விவேக் அவர்கள் நடிகராக அறிமுகமானார்.

34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக தனது நகைச்சுவை மூலம் சமூக சிந்தனைகளையும் பகுத்தறிவு சிந்தனைகளையும் எடுத்துரைத்து வலம் வந்தவர் இன்று காலமானார் என்பது வேதனைக்குறியது.

ஐந்துமுறை தேசிய விருதும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை விருது மற்றும் கலைமாமணி சின்னக்கலைவாணர், ஜனங்களின் கலைஞன், “பத்ம ஶ்ரீ” உட்பட பல பட்டங்கள் பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக்.
பார்போற்றும் நமது முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பும் நட்பும் வைத்திருந்த ஒரே நடிகர் விவேக்.

திரை வட்டாரத்தில் அனைவருடனும் நட்போடு இருந்த அவர் திரை உலகினர் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் எல்லா அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் இதயத்திலும் இடம் பிடித்து பவனி வந்தவர்.
‘ஒரு கோடி மரம்’ கன்றுகள் நடும் திட்டம் மூலம் சூழலியல் ஆர்வலராக அறியப்பட்டார்.பலரும் அவரை முன்மாதிரியாக நினைத்து அவரை பின்பற்றி நல்ல செயல் செய்துவந்தனர்.
விவேக் அவர்களின் மறைவு நடிகர் சமூகத்துக்கும் திரை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அருமை நண்பரை இழந்து விட்டேன்.விவேக் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது துக்கதில் பங்கு கொள்கிறேன்.
. அனைத்து நடிகர்,நடிகைகள் சமூகம் சார்பிலும் இந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு நாசர் கூறி உள்:ளார்.

Related posts

அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஆடு பலி:: ரஜினிகாந்த் மன்றம் கண்டனம்

Jai Chandran

Prince Pictures S Lakshman presents Karthi starrer “Sardar”

Jai Chandran

Suriya , Ajay Devgn extend their warm wishes to Balan The Boy trailer

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend