Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை ரோஜாவுக்கு திடீர் ஆபரேஷன் : உடல் நலம் பற்றி செல்வமணி தகவல்

பிரபல திரைப்பட இயக்குனரும், பெப்சி தலைவரும், ஆந்திரா எம் எல் ஏ நடிகை ரோஜாவின் கணவருமான ஆர். கே. செல்வமணி ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரோஜாவுக்கு கடந்த ஆண்டே ஒரு ஆபரேஷன் நடக்கவிருந்தது. கொரோனா தொற்று காலம் என்பதால் ஆபரேஷன் தள்ளிப்போடப்பட்டது.
தேர்தல் முடித்த பிறகு தற்போது ஆபரேஷன் நடத்த எண்ணியிருந்த நிலையில் அது தாமதமாகிவிடும் என்பதால் தற்போது அவருக்கு ஆபரேஷன் நடத்தி முடிக்கப்பட்டது. ரோஜா நலமாக இருக்கிறார். அவரை ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால் தற்போது யாரும் சந்திக்க வரவேண்டாம். அதுபற்றி நான் தகவல் தெரிவிக்கிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் ரோஜா நலமாக உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு
ஆர் கே செல்வமணி கூறி உள்ளார்.

Related posts

“Por” character closely resembles real-life – Sanjana

Jai Chandran

VelsSignature ‘s UthirumMottukkal Short Film Teaser Tomorrow

Jai Chandran

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சிம்பு நடிக்கும் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend