Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக, புதுவையில் ஏப்ரல் 6ல் சட்டசபை தேர்தல்.. தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு:

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் முதல்வாரத்தில் வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி மாதம் இறுதியிலேயே 26ம் தேதி (இன்று) அறிவிக்கப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது  தேர்தல்  கால கட்டங்கள் பற்றிய தகவல் வெளியிட்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

வேட்புமனு தாக்கல்: 12-03-21

வேட்புமனு தாக்கல் நிறைவு : 19-03-21

வேட்புமனு பரிசீலனை: 20-03-21

வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் : 22-03-21

தேர்தல் நாள் : 06-04-21

வாக்கு எண்ணிக்கை : 02-05-21

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்:

தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

அசாம்:

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங் களாகத் தேர்தல் நடக்கிறது மார்ச் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல். ஏப்ரல் 1-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல். 6-ம் தேதி 3-ம் கட்டத் தேர்தல். நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங் களாகத் தேர்தல் நடக்கிறது.

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதி, 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதி  நடக்கிறது.  3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்ட தேர்தல்  ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும். 6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடக்கிறது.

கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி. 5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடை பெறும். அசாம் மாநிலத் தில் 3 கட்டமாக தேர்தல் நடை பெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

மேலும் தேர்தல் ஆணையர் கூறும்போது,’ மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள், பண்டி கைகள் கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது;   அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

 

Related posts

”மட்டி” சர்வதேச அளவில் பேசப்படும் பிரமாண்ட ஆக்‌ஷன் படம்: திரையுலகினர் பாராட்டு

Jai Chandran

Vezham movie has come out very well – Actress Janani

Jai Chandran

ஜெயிலர் வெற்றிக்கு காரணம் ரஜினியின் பவர் – இயக்குனர் நெல்சன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend