Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ படம் தொடக்கம்: கேஜிஎஃப் பட இயக்குனர் டைரக்‌ஷன்

சினிமா ஆளுமைகளான ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் ‘சலார்’ திரைப்படம் ஜனவர் 15ம் தேதி , பூஜையுடன் தொடங்குககியது.

விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய ஆக்ஷன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு வன்முறையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சுவாரஸ்யமான வகையில், தகவல்கள் உண்மையாக இருந்தால் அவர் மிகவும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் தோன்றுவார்.

‘சலார்’ திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது. முன்னதாக 15-ம் தேதி படத்தின் பூஜையை ஐதராப்பத்தில் நடந்தது.  டாக்டர். சி.என். அஸ்வத்நாராயண் – கர்நாடக துணை முதல்வர், முன்னணி இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, நடிகர் யாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பிரபாஸ் வெள்ளை குர்தாவிலும் கே ஜி எஃப் ஸ்டார் யஷ் நீல நிற டிஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பங்கேற்றார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் எடுக்க போட்டோகிராபர்கள் பரபரத்தனர். அவர்கள் இருவரும் ஒன்றக நின்று போஸ் கொடுக்க அது வைரலானது.

 

Related posts

Shruti and Kamal join hands for a new musical project

Jai Chandran

கிங்டம் (பட விமர்சனம்)

Jai Chandran

SayajiShinde as Villian in Sabapathi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend