Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் தொடங்கியது. அதில் பங்கேற்க சென்னையில்  பிறந்த நாள் கொண்டாடிவிட்டு மறுநாள் தனிவிமானத்தில் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

அண்ணாத்த படப்பிடிப்பு மும்முரமாக நடந்தது. ரஜினிகாந்த் படப்பிடிப்பை விரைந்து முடிக்க 14 மணி நேரம் பணியாற்றினர். நேற்று முன்தினம் படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது,

இந்நிலையில் ரஜினிகாந்த்துக்கு இன்று ரத்த அழுத்த பிரச்னை ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவ்மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பிறகு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,’ரஜினிகாந்த் இன்று மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த ஓட்டத்தில் மாறுபாடு இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரியவந்தது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் அவரை அருகிலிருந்து கண்காணித்து வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினிகாந்த் விரைந்து குணம் அடைய ஆந்திர கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன்கல்யாண் விருப்பம் தெரிவித்து மெசேஜ் பகிர்ந்தனர்.

Related posts

விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ ரீ ரிலீஸ் ..

Jai Chandran

‘ யாத்திசை’ தரணி ராசேந்திரனின் புதிய படம்

Jai Chandran

மஞ்சு வாரியர் வெளியிட்ட “சின்ன சின்ன ஆசை” ‘ பட செகண்ட் லுக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend