Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

10 வருட காதலியை கைப்பிடித்த பரியேறும் பெருமாள் எடிட்டர் செல்வா

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா ஆர்.கே. இவர் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், பொன்ற படங்களில் தனது கைவண்ணத்தை காட்டியதுடன் தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன், ஆர்யா நடிகும் சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

செல்வா ஆர்.கேவும், சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்
பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். சினிமாவில்  சாதித்து விட்டுத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காத்திருந்திருந்தார்கள். பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக செல்வா ஒரு இடத்தை எட்டிய பிறகு திருமணம் செய்வது குறித்து இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். லட்சியத்திற்காக பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருந்து கரம்பிடித்துக்கொண்ட தம்பதிகளை வாழ்த்தினார்கள்

Related posts

வெங்கட் பிரபு வழங்கும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” கதை என்ன?- இயக்குனர் ஆனந்த்

Jai Chandran

ரிங் ரிங் பட விமர்சனம்

Jai Chandran

மோகன்லாலுக்கு மகனாக ரோஷன் மேகா நடிக்கிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend