Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள் விமர்சனம்

சூரரைப்போற்று ( விமர்சனம்

சூரரைப்போற்று ( விமர்சனம )

படம் : சூரரைப்போற்று
நடிப்பு :சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, ப்ரெஷ் ராவல் மோகன்பாபு, கருணாஸ்,
தயாரிப்பு :2டி நிறுவனம் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் குணீத் மோங்கா
ஒளிப்பதிவு : நிகேத்

இசை :ஜிவி பிரகாஷ்,

டைரக்ஷன் : சுதா கொங்கரா

ரிலீஸ் :அமேசான் பிரைம் வீடியோ

நூறு வருஷத்துக்கு முன்னாடி கரண்டு வேணாம்னு சொன்னாங்க 50வருஷத்துக்கு முன்ன
கார் வேணாம்னு சொன்னாங்க.. இப்ப பிளேன் வேணாங்கிறாங்க.. ஆனால் வேணும்.. கண்டிப்பாக ஏழைக்கும் அதுவும் 1டிக்கெட்ல ரூபாய்ல.. இதுதான் சூரரைப்போற்று.. முடியுமா.. முடிகிறது டெக்கான் விமானம் தொடங்கும் சூர்யாவால்..
சுற்றிலும் மலை, வெட்ட வெளியில் பொட்டலில் டென்ட். சூர்யா அவரது அம்மா ஊர்வசியுடன் வசிக்கிறார். ஏரோ பிளேன் கம்பெனி தொடங்கணும் இது தான் சூர்யாவின் தாரக மந்திரம் அதிகாரிகளை சந்திக்கிறார். கோடிகளில் பணம் தேவைப்படுகிறது. மக்களிடம் பணம் திரட்டுகிறார்.

 

விமான பைலட் பயிற்சி முடித்த சூர்யா தனது இரண்டு நண்பர்களுடன் விமான கம்பெனி தொடங்க கடும்முயற்சி எடுக்கின்றனர். விமான நிறுவன அதிபர் பரெஷிடம் டீல் பேசுகிறார். சூர்யாவுடன் பேசும் அதிபர் பிச்சைக்காரனோடு பிளைட்டில் பார்க்கமுடியாது என்று சூர்யாவை விரட்டுகிறார்.
சூர்யாவுக்கு உதவ சில அதிகாரிகள் முன்வருகின் றனர். ஊர் மக்கள் தரும் பணம் எல்லாம் சேர்த்து நிறுவனம் உருவாக்கி விமானத்தை பறக்க விட அது தோல்வியில் முடிகிறது. சூர்யா போராட்டம் தொடர்கிறது. விசாரணை நடக்கிறது. தவறு விமானத்துக்கு ஆயில் நிரப்பியவரின் தவறு என்று நிரூபணமாகிறது. சூர்யா மன்னிக்கப்பட்டு விமான நிறுவனம் தொடர அனுமதி கிடக்கிறது.
சூர்யாவின் நிறுவனத்தை அழிக்க பரெஷின் மறைமுக சதிகள் தூள் தூள் ஆகின் றன. ஆபத்தான பயண மென்று பரப்பப்படுகிறது. கிளைமாக்சில் விமானத்தில் மக்கள் வந்தார்களா என்பதற்கு படம் கண்ணில் நீர் பெருக்குடன் மனதில் மகிழ்ச்சி நிறைவுடன் நிறைக்கிறது.


காதல் கல்யாணம் படத்தின் ஒரு சைடிஷ். அபர்ணா பாலமுரளி சூர்யாவுடன் அடிக்கடி செல்ல மோதல் நடத்துகிறார். வேடத்துக்கு பொருந்தி இருக்கிறார்.
சுதா கொங்கரா தவிர யாராலும் இப்படத்தை இவ்வளவு நேர்த்தியாக இயக்க முடியுமா தெரியாது.
ஜிவி பிரகாஷ் காட்சிகளை மிரள வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் நிகேத் பணி கடுமையானது.

 

ஏர் டெக்கான் அதிபர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை தழுவிய படம்

சூரரைப்போற்று சூறாவளி

 

Related posts

முதல்வரின் தகவல் பலகை மக்கள் பார்வைக்கு எப்போது? கம்ல்ஹாசன் கேள்வி

Jai Chandran

மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’

Jai Chandran

இயக்குநர் ஸ்ரீ வெற்றியின் “நாற்கரப்போர்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend