Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு பாரதிராஜா  அறிக்கை 

 

இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகிறது  800.

இதில் முரளிதரனாக  விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வந்ததலிருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இ

பிரபல இயக்குனர்ர் ரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,
வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ள னர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.
நிற்க! தாங்கள் செய்ய விருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட் டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதர னைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித் தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.
விளையாட்டு வீரனாக என்ன தான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்த னையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவு கூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக் கலாமே… என கேட்கின்றனர்.


அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்தி ருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங் கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் கால காலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.
தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.
பின் குறிப்பு : 800 திரைப் படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளி யிட்டதை அறிந்தேன்.

 

800 – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளை யாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலை ஞர்கள், தொழில் நுட்பக் கலை ஞர்களின் திறமை உலக அரங் கில் வெளிக் காட்ட அடித்தள மாக இருக்கும் என்று வெளி யீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமை யை கண்டு சிரிப்பாதா ? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்.. பாடம் சொல்லும். ஒரு செய்தி யை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருத லாம். எங்களைப் பொறுத்த வரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடி யாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக் கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.
இவ்வாறு ஆவேசமாக இயக்குநர் பாரதிராஜா கூறி உள்ளார்.

Bharathiraja, Vijayasethupathi, Muthiya Muralitharan, Biopic, 800,
பாரதிராஜா, விஜய் சேதுபதி, 800 திரைப்படம், முத்தையா முரளிதரன,

Related posts

அந்தகன் படம் புதிய அனுபவத்தை தரும்: பிரசாந்த் பேச்சு

Jai Chandran

“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா

Jai Chandran

எம் ஜி ஆர் பட டைட்டில் படத்தில் சென்சார் போட்ட கத்திரி: இயக்குனர் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend