கமல்ஹாசன் அழைப்பு..
ஏற்ற தாழ்வு பேசுவோரை விரட்ட வாருங்கள்..
இன்று சித்திரை 14. தமிழ் புத்தாண்டு தினம். அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளும் இன்றுதான் . இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிவிட்டரில் மக்களுக்கு அழைப்பு விட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது :
இந்திய திருநாடு யாரையும் மத்தாலோ, மொழியிலோ, இனத்தா லோ, தொழிலாலோ பாகுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவுதான்
அரசியல் சட்டமாகி தனிமனித உரிமைகளின் கேடயமாக நிற்கிறது. அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செய்யும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே..
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
#Kamalhaasan Meaning ful message To People