ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை..
மத்திய அரசு விளக்கம்..
புதுடெல்லி, ஏப் :
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக பல்வேறு நாடுகளுக்கு பரவி இந்தியா விலும் நுழைந்தது.கொரோனா வைரஸ் கொரோனஸ் பரவலை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது
கடந்த மார்ச் 24ந்தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 14மத்தேதி வரை அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீட்டுக்குள்ளயே அடைந்து கிடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால் கொரோனா சமுக பரவல் ஆகாமல் தடுக்கப்பட்டிருக் கிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பை தடுக்க முடியவில்லை.
மராட்டியம், தமிழகம், டெல்லி மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்களில் பொது மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கனா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க கேட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து மேலும் 2 அல்லது 3 வாரத்துக்கு ஊரடங்கு நீடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
#PM Modi to extend lockdown by another three weeks
#ஊரடங்கு மேலும் 3 வாரம்
நீடிக்க வாய்ப்பு