Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா நடித்த அரசு விழிப்புணர்வு படம்

’முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ பற்றி குறும்படம் எடுக்கப்பட்டு அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது.
இது பற்றி ’கட்டில்’ திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.

கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் எளிமைப்படுத்தப்பட்டு இன்று பல உயிர்களை காத்து வருகிறது. இத்திட்டம் பற்றிய குறும்படத்தை நான் இயக்கியதில் பெருமையடைகிறேன்.
’கருப்பன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான தான்யா ரவிச்சந்திரனைக் கொண்டு காப்பீட்டுத் திட்டம் குறித்து, எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இந்த குறும்படத்தை இயக்கியிருக்கிறேன். மேலும் சாயாதேவி, யார்கண்ணன் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். NK.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்ய, செழியன் குமாரசாமி இக்குறும்படத்தை தயாரித்திருக்கிறார். இவ்வாறு கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

Related posts

திருமணத்துக்கு இ பதிவு நீக்கம்..

Jai Chandran

Karthi announced Sardar 2 Part

Jai Chandran

PROMO of TughlaqDurbar

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend