Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சின்னத்திரை சங்க தலைவருக்கு “சாஹிப் ஜாதா” விருது.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் ஶ்ரீநிவாசனுக்கு “சாஹிப் ஜாதா” விருது.

5250 நாடக மேடைகளை கடந்து வெற்றிகரமாக கலைப்பணியில் சிறந்து விளங்கும் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும், தமிழக அரசின் கலைமாமணி விருதாளருமான  சிவன் ஶ்ரீனிவாசனின் தொடர் மானுட சேவையை பாராட்டும் வகையில் இன்று 14/07/2024 காரைக்கால் அம்மையார் கோயில் மணி மண்டபத்தில் இரவு 8:00 மணிக்கு நடைபெற்ற ‘நேரம் நல்ல நேரம்’ நாடகத்தில் இந்த வருடத்திற்கான “சாஹிப் ஜாதா 2024 சேவைச் செம்மல்” விருது அதன் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருது பெற்ற சிவன் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பவுண்டேசன் செயலாளர் M. முஹம்மது தாஹா மரைக்காயர், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் சேக் மிரான் சாஹிப் மற்றும் காரைக்கால் சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது ஆரிப் மீயர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்வில் காரைக்கால் சட்ட மன்ற உறுப்பினர் நாஜிம், கலைமாமணி காரை சுப்பையா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Gautham Vasudev Menon’s Ondraga opens the gate

Jai Chandran

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Jai Chandran

EtharkkumThunindhavan Shooting wrapped up

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend