1970, 80 வெள்ளிக்கிழமை விரதம் சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை ஜெயசித்ரா. இவரது கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷ் தந்தையுமான கணேஷ் திருச்சியில் இன்று காலமானார் அவருக்கு வயது 62
கும்பகோணத்தில் பிறந்த கணேஷ் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணேஷுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் தற்போது திருச்சியில் இருந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவர்களது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. நாளை இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது.