மாணவ, மாணவிகள் ஹாப்பி.
சென்னை மார்ச்:
கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களை மிரட்டிக்கொண்டிருக் கிறது மறறொரு புறம் மாணவர்களை குதிகளப்படுத்தியிருக்கி றது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை எல்லா மாணவர்களும் பாஸ் செய்யப் படுவர்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்
ரிசல்ட்டை நினைத்து பயந்து கொண்டிருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மார்ச் 24ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு திட்டமிடப்பட்டது. அதை தள்ளிவைக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனாலும் அரசு தேர்வை நடத்தியது. கொரோனா அச்சுறுத்தல், போக்குவரத்து வசதி இல்லாமை என பல காரணத்தால் நிறைய மாணவர்கள் தேர்வை எழுத முடியவில்லை என புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, மறுதேர்வு நடத்தப்படும், விரைவில் மறுதேர்வு தேதி அறிவிக்கப் படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
#TN CM anounces pass for students till class Nine