Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மாநாடு (பட விமர்சனம்)

படம் : மாநாடு

நடிப்பு: சிலம்பரசன் டி.ஆர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, மனோஜ், உதயா, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சுப்பு பஞ்சு

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன்

இயக்கம்: வெங்கட் பிரபு

பி.ஆர்.ஒ.: A ஜான்

 

ஊட்டியில் நடக்கும் தனது நண்பனின் கல்யாணத்துக்கு  துபாயிலிருந்து வருகிறார் சிம்பு. அறிமுக காட்சியிலிருந்தே  கதை தொடங்கி விடுகிறது. திருமண விழாவிற்கு செல்லும் சிம்பு  நண்பர்களுடன் சேர்ந்து மணப்பெண்ணை கடத்தி காதலனுடன் சேர்க்க முயல்கிறார். மணப்பெண் குடும்பத்தினர் துரத்துவதால் காரை வேகமாக ஓட்டுகிறார் சிம்பு. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு நபர் மீது கார் மோதுகிறது. போலீஸ் சுற்றி வளைக்கிறது அப்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரி எஸ்.ஜே சூர்யா சிம்புவையும் அவரது நண்பர்களையும் தனி இடத்துக்கு அழைத்து வருகிறார். நண்பர்களை விடவேண்டுமென்றால் இன்று நடக்கும் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வரை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று சிம்புவுக்கு எஸ்.ஜே சூர்யா நிபந்தனை விதிக்கிறார். அதைக்கேட்டு சிம்பு அதிர்ச்சி அடைகிறார். நண்பர்களின் உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார். கைத் துப்பாக்கியுடன் மாநாட்டுக்கு வருகிறார். மேடையில் முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போது அவரை சுடுவதற்கு சிம்பு குறி வைக்க எண்ணுவதற்குள் வேறு யாரோ ஒருவர் முதல்வரை சுட்டுக்கொள்கிறார். அதிர்ச்சி அடையும் சிம்பு கண்விழிக்க நடந்ததெல்லாம் கனவு போல் தெரிகிறது. மீண்டும் மீண்டும் இதேபோல் கனவு வரும்போதுதான் நடப்பதெல்லாம் நிஜம்தான் ஆனால் ஒரே நாளில் சிக்கிக்கொண்டிருக்கும் தான் அடுத்த நாளுக்குள் செல்ல முடியாததால்  இப்படி நடப்பதை உணர்கிறார். பிறகு முதல்வரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சிம்பு முயற்சிக்கிறார் அது, ஒரே நாளில் சிக்கிக்கொண்டு அடுத்த நாளுக்குள் பயணிக்க முடியாத எஸ்.ஜே.சூர்யாவுக்கும் தெரிகிறது. சிம்புவை எப்படியாவது தடுத்து முதல்வரை கொல்ல எஸ்.ஜே. சூர்யா படாதபாடுபடுகிறார். இந்த துரத்தல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அதிரடியுடன் கிளைமாக்ஸ் வரை ஜெட் வேகத்தில் பறக்கிறது.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் என்றாலும் சும்மா கில்லியாக சுழன்று வெற்றிக்கனியை   தட்டி பறித்திருக்கிறார். விமானத்தில் அவரது அறிமுக காட்சியின்போதே ரசிகர்களின் விசில் சத்தமும் அரங்கை அதிர வைக்கிறது.

கொஞ்சமும் தாமதிக்காமல் சட்டென கதைக்குள் காட்சிகள் சென்றுவிடுவதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வமும், பரபரப்பும் அரங்கு முழுவதும் ஆக்ரமித்துக்கொள்கிறது. அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் துணிச்சலாக சிம்பு  களம் இறங்கி இருய்பதும் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை.

எஸ்,ஜே,சூர்யாவிடம் சிக்கிய பிறகு அவர் முதல்வரை கொல்லச் சொல்லி நிபந்தனை விதிப்பதை கேட்டு அதிர்ச்சி அடையும் சிம்பு ’நான் ஏன் சார் அவரை கொல்லணும்’ என்று கேட்டு வாதம் செய்வதும் பிறகு மாநாட்டுக்கு சென்று அங்கு மேடையில் பேசும் முதல்வர் எஸ்.ஏ.சந்திரசேகரை கொல்ல தயங்கும்போது திடீரென்று எங்கிருந்தோ பாயும் குண்டு அவரை கொல்வதும் இதையடுத்து மதக் கலவரம் மூள, அதையே சாக்காக வைத்து சிம்புவை எஸ் ஜே.சூர்யாவின் போலீஸார் சுட்டுக்கொள்வதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

என்னடா தொடக்கத்திலேயே ஹீரோ சிம்புவை கொன்று விட்டார்களே என்று யோசிக்கும் நிலையில் நடந்தது எல்லாம் கனவு என்பது போல் காட்டியபிறகே  படபடப்பு அடங்குகிறது. ஆனால் டைம் லூப் கதை என்பதால் நடந்த சம்பவங்களே படத்தில் பலமுறை இடம் பெற்றாலும்  ஒவ்வொரு முறையும் அது  சிம்புவுக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையேயான  மோதலும் மாறியதும் சுவாரஸ்யமாகி விடுகிறது.

முதல்பாதி இப்படி பரபரப்பு ஆக்ரமிக்க இரண்டாம் பாதியில் எஸ்.ஜே.சூர்யாவும் டைம் லூப் சிக்கலில் மாட்டிக்கொண்டு சிம்புவை தடுக்க முடியாமல் தடுமாறுவது கலகலப்புக்கு பாதை போடுகிறது. நேருக்கு நேர் இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் எத்தனை முறை வந்தாலும் அத்தனை முறையும் முத்திரை பதிக்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரை காப்பாற்ற சிம்பு எடுக்கும் முயற்சிகள் கிளைமாக்ஸ் வரை நீள்கிறது.  அதில் வைக்கப்பட்டிருக்கும் டிவிஸ்ட் அப்ளாஸை அள்ளுகிறது.

படத்தில் உதயா, மனோ, கருணாகரன், பிரேம்ஜி, ஒய் ஜி மகேந்திரன், சுப்பு பஞ்சு, ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் , வாகை சந்திரசேகர்,  கவுரவ வேடத்தில் மஹத் ராகவேந்திரா  என எல்லா கதாபாத்திரங்களும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். எல்லோரையும் ஒரு கட்டுக்கோப்புக்கு கொண்டு வந்து படத்தை இயக்கி இருக்கும் வெங்கட் பிரபு தனது வெற்றியை மீண்டும் தக்க வைத்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்தை அடுத்த லெவலுக்கு தனது அதிரடி இசை மூலம் கொண்டு சென்றிருக்கிறார். ரிச்சர்ட் நாதன் கேமரா ஆரவாரம்  நிகழ்த்தி இருக்கிறது. திரும்ப திரும்ப ஒரே காட்சிகள் வந்தபோதும் அதை குழப்பம் இல்லாமல் எடிட் செய்திருக்கும் எட்டிட்டர பி.எல்.பிரவிணையும் கைகுலுக்கி பாராட்டலாம்.

மாநாடு: சிம்புவின் வெற்றி பட்டியலில் டாப் இடம் பிடிக்கும்.

 

 

Related posts

நடிகர் சேது மறைவு.. சந்தானம் இரங்கல்

Jai Chandran

G.V.Prakash’s Bachelor from Today

Jai Chandran

first single from #MaaManithan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend