Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் கலைப்புலி எஸ். தாணு

அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் G, தயாரித்து இயக்கும் புதிய படத்தின் தலைப்பை பிரம்மாண்ட திரைப்படங்களைத் உருவாக்கித்தந்த பெருமைமிக்க தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்களால் இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.
இப்படத்திற்கு படக்குழுவினர் “கருப்பு கண்ணாடி” என தலைப்பிட்டு இருக்கின்றனர். கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது.
இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சரன் ராஜ், நடிகர் கஜரஜ் , பாடகர் வேல்முருகன் நடிகை சுபாஷினி மேலும் சில முக்கிய பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
சம்சாத் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த்தா பிரதீப் இப்படத்தின் இசை அமைப்பாளராகவும். . எழுமின், உருமி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்திற்கு படத்தொகுப்பாளர் ஆகவும்,
மெட்ரோ மகேஷ் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் ஆகவும் பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அதி விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Related posts

கலைப்புலி எஸ்.தாணு வெளியிடும் மோகன்லால், பிரியதர்ஷன் பிரமாண்ட படம்

Jai Chandran

தஞ்சையில் 1000 மூட்டை நெல் மழையில் சேதம்: கமல் கேள்வி

Jai Chandran

ஷெரிப் மாஸ்டரின் இலவச நடனக் கல்வி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend