Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இந்தியா முழுவதும் நாளை ஊரடங்கு..

கொரோனாவை எதிர்த்து அமைதி போர்..

பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஊரடங்கு உத்தரவு போடுவார்கள் என்று அந்த காலத்தில் பாட்டிக்கள், அம்மாக்கள் சொல்லி கேள்விபட்டிருப்பீர்கள் அதை இந்த தலைமுறை நேரில் பார்க்கிறது. எல்லாம் கொரோனா வைரஸ் செய்திருக்கும் அச்சத்தின் வெளிப்பாடு.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவும் அதில் தப்ப வில்லை. இந்திய மக்கள் தங்களை தாங்களே முதன் முறையாக வீட்டு சிறையில் அடைக்கப் போகிறார்கள். இந்த ஏற்பாடு கொரனாவிலிருந்த்து தப்பிக்கவும் உயிர்களைக் காக்கவும் என்பதால் அனை வரும் மனமுவந்து மத்திய மோடி அரசின் நடவடிக்கைக்கு சம்மத்திருக்கிறார்கள்.

நாளை (ஞயிற்கிழமை) காலை7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரை ஊரடங்கு அமலாகிறது. அதற்கு மக்களும் தங்களை தயாராக்கிக் கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஆயுட் காலம் 14 மணி நேரம் அந்த நேரத்தில் மனிதர்கள் மேல் படாமல் இருந்தால் அது தானாக இறந்துவிடும் என்று டாக்டர்கள் கணித்தி ருக்கிறார்கள். சனிக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை காலை வரை யாருமே பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்போது அது 14 மணி நேர கணக்காகிவிடும். அந்த நேரத்தில் கொரோனா இறந்து விடும்.

கொரோனா வைரஸ் 3வது மற்றும் 4வது வாரத்தில்தான் அதிகம் பரவும். தமிழ்நாடு தற்போது அந்த காலகட்டத்தில் இருப்ப தால் இந்த ஊரடங்கை அலட்சியம் செய்யாமல் கடை பிடிப்பது என்பது மிகமிக முக்கியம். வெளியில் சென்று வந்தால் சோப்பால் கைகளை ஒன்றுக்கு இரண்டு முறை கழுவ வேண்டும். இருமல் சளி இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும்., குளிர்ச்சியான பானங்களை தவிர்க்க வேண்டும். நீரை சுட வைத்து பருகவேண்டும், முக கவசம் அணிய வேண்டும், கைகுலுக்கு வதை தவிர்க்க வேண்டும் போன்ற டாக்டர்களின் அறிவுரை களை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

#Corono vairus scare :Tomorrow India Shut Down

Related posts

சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், கார்த்தி, நயன்தாராக்கு தமிழக அரசு விருது..

Jai Chandran

16 வயது பையனாக நடிக்கு 40 கிலோ எடை குறைத்த துருவா: அர்ஜூன் பெருமிதம்..

Jai Chandran

போலீஸ் தாக்கி வியாபாரி முருகேசன் மரணம்: சரத்குமார் அறிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend