அவெஞ்சர்ஸ் நடிகரையும் விடாத வைரஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ் மார்ச்:
ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட் வார் படத்தில் நடித்தவர் இட்ரிஸ் எல்பா. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து எல்பா வெளியிட்டுள்ள மெசேஜில்,’கோவிட் 19 (கொரேனோ வைரஸ்) பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பதாக பாசிடிவ் ரிப்போர்ட் வந்தது. தொற்று இருப்பதாக ரிப்போர்ட் வந்தாலும் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். தொற்றுக்கான அறிகுறி எதுவுமே எனக்கு இல்லை. இதில் அக்கறை எடுத்து என்னை நான் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கி றேன். மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். யாரும் பயப்பட வேண்டாம் எனது உடல்நிலை பற்றி அவ்வப்போது ரசிகர்களுக்கு தெரிவிக்கிறேன்’ எனக் கூறி உள்ளார்.
#Avenger Actor Idris Elba Tests Po sitive For Coronavirus