Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது

நெட்ப்ளிக்ஸ் (Netflix) நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம்.

தமிழின் திறன்மிகு இயக்குநரான வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” சுமதி எனும் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை, அவளது குடும்பம் அறிந்த பிறகு, அவள் குடும்பத்தினருடன் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை, போராட்டத்தை சொல்லும் கதையாகும். அவளது தந்தை, அவளை ஏற்று கொண்டு, குழந்தையை குளிப்பாட்டும் சடங்கை நடத்த, அவளை வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆனால் வீட்டில் நடக்கும் சம்பவம் அவளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

“ஓர் இரவு”படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது…

ஒரு தந்தைக்கும், மகளுக்குமான எளிய உறவு, வாழ்வின் பயணத்தில் எப்படி தடம் மாறுகிறது என்பதே கதை. எனது உள்ளுணர்வு சொல்ல விரும்பியது, கௌரவம் எனும் பெயரில் சமூககத்தில் குடும்ப அங்கம் ஒருவர் மீது ஒருவர் எத்தனை பெரிய வலியை உண்டாக்குகிறார்கள் என்பதே. “ஒர் இரவு” நம் சமூகத்தில் தற்போதும் நிலவிக்கொண்டிருக்கும் மூடத்தனத்தை, ஞாபகப்படுத்தும். அது நம் இதயத்தை சுக்குநூறாக்கி, வெட்கப்படவைக்கும்.

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக வெளியிடுகிறது.

“பாவக்கதைகள்” திரைப்படம் டிசம்பர் 18, 2020 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 193 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.

ஆர்.எஸ்.வி.பி:

RSVP நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்பது நாம் இங்கு சொல்லப்படாத, சொல்லப்படவேண்டிய கதைகளை உருவாக்குவதும், நாம் சொல்ல ஆசைப்படும் கதைகளை, மக்கள் தியேட்டர் சென்று பார்க்க ஆசைப்படும் கதைகளை உருவாக்குவதும் ஆகும். இன்றைய இளைஞர்கள் இணையவெளியில் தாங்கள் பார்க்கும் கதைகளில் நிறைய தேர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் இந்த எழுச்சியை, இந்த வளர்ச்சியை டெக்னாலஜியை தாண்டி நாம் மதிக்க வேண்டும். நமது நோக்கம் அவர்களுக்கான கதைகளை தொடர்ந்து புதிதாக, வித்தியாசமாக திரை தளத்திலும் டிஜிட்டல் தளத்திலும் உருவாக்கிகொண்டே இருக்கவேண்டும் என்பதாகும்.
இந்நோக்கத்தில் செயல்படும் RSVP Movies நிறுவனம் Love Per Square Foot, Lust Stories, Karwaan, Pihu, Kedarnath, URI – The Surgical Strike, Sonchiriya , Raat akeli hain , the sky is pink and Mard Ko Dard Nahi Hota போன்ற முக்கிய படைப்புகளை உருவாக்கியுள்ளனர். மேலு அவர்களது தயாரிப்பில் Rashmi Rocket , Tejas , Pippa and Sam Maneckshaw போன்ற படைப்புகள் வெளிவர தயாராகவுள்ளது.

Flying Unicorn Entertainment நிறுவனம்

ஆஷி துவா சாரா தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய சுதந்திரமாக இயங்கும் நிறுவனம் தான் Flying Unicorn Entertainment ஆகும். ஆஷி துவா சாரா தான் இந்தியாவில் முதன் முதலில் ஆந்தாலஜி படைப்பை, பாலிவுட்டின் முக்கிய ஆளுமைகளான ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப், மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் இயக்கத்தில் பாம்பே டாக்கீஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவற்றை உருவாக்கினார். மேலும் இவர் சஃய்ப் அலிகான் நடிப்பில் உருவான கேபர் ப்ளாக் காமெடி (caber black comedy) படமான காலக்காண்டி படத்தை தயாரித்துள்ளார்.

Related posts

Karnan Censored UA .

Jai Chandran

ஜோர்டானிலிருந்து நடிகர் பிருதிவிராஜ் வீடு திரும்பினார்..

Jai Chandran

Friendship Movie 3rd single from tomorrow : Harbhajan Singh Bdy special !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend