Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“மஞ்சக்குருவி” படம் கதை- பாடலுக்காக வெற்றிபெறும் : திரையுலகினர் வாழ்த்து

வி  ஆர் கம்பைன்ஸ விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், “மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் விநியோகஸ்தர் சங்க தலைவர் ஜே.ராஜன் பேசியது:

மஞ்சக்குருவி டைட்டில் அருமை யாக உள்ளது இப்படத்தை விமலா தயாரித்திருக்ககிறார். அதற்கு அவரது கணவர் ராஜநாயகம் அனுமதி வழங்கி உள்ளார். மனைவிக்கு அவர் தந்திருக்கும் மரியாதை திரையுலகில் புதியது. அவரது நல்ல உள்ளத்துக்காகவே இப்படம் வெற்றிபெறும்.

சிறுபட்ஜெட் படங்கள் திரையுலகை வாழ வைக்கிறது. அதன் படபிடிப் புக்களும் தமிழ்நட்டிலேயே நடப்ப தால் இங்குள்ள தொழிலாளர்கள்  வாழ்கிறார்கள் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் நடப்பதால் தமிழகத்தில் உள்ள தொழிலாளர் களுக்கு வேலை கிடைக்காமல் போகிறது. பெரிய நடிகர்கள் படபிடிப்புகளை 75 சதவீதம் தமிழகத்தில் நடத்த சொல்ல வேண்டும் தமிழ் பற்றுடன் அவர்கள் நடக்க வேண்டும்.

இயக்குனர் பேரரசு பேசியது:

மஞ்சக்குருவி அண்ணன் தங்கை பாட கதை என்று இயக்குனர் கூறினாட். பாசமலர், தொடங்கி திருப்பாச்சி,  கிழக்கு சீமையிலே என அண்ணன் தங்கை பட கதைகள் எல்லம் வெற்றி பெற்றி ருக்கிறது. அதுபோல் மஞ்சக் குருவி படமும் வெற்றிபெறும். இப்படத்துக்கு இசைக்கவி சவுந்தர்ய்ன் இசை அமைத்திருக் கிறார். இளையராஜாவுக்கு பிறகு மெலடி இசையில் சிறப்பான பாடல்கள் வழங்குவது சவுந்தர்யன் தான்.  திரையுலகில் அவருக்கு நல்ல வரவேற்பு விரைவில் கிடைக்கும்.

இசை அமைப்பாளர்  சவுந்தர்யன் பேசியது:

.மஞ்சக்குருவி பட கதையை கேட்டதும் பிடித்துவிட்டது. இந்தபடத்துக்கு வழக்கமான் என் படங்களில் வரும் 7 பாடல்கள் போல் இப்படத்திலும் 7 பாடல்கள வேண்டும் என்று இப்பட இயக்குனர் கேட்டார்ர. அதுபோல்7. பாடல்களள் அமைத்துத் தந்தேன் ஆனால் சில காரணத்தால் 7 பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை. இடம்பெற்றி ருக்கும். மற்ற பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கும். என் பாடல்களில் உணர்வுப்பூர்வமான. இசை இருக்கும். அது எளியவர் களை சென்றடையும்  இப்பட பாடல்களும் அப்படி சென்று சேரும். மஞ்சக்குருவி படம் வெற்றிபெறும்

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ராஜநாயகம் கவிதை நடையில் பட குழுவின ருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இயக்குனர் ரங்கன் சின்னதம்பி கூறும்போது,” ஒரு ராஜாளி பறவையை ‘மஞ்சக் குருவி’யாக மாற்றுவதுதான் படத்தின் கதை. அண்ணன், தங்கை பாச போராட்டம் கதையின் உயிரோட்டம். கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். வில்லனாக குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள் ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நான் (அரங்கன் சின்னதம்பி) செய்கிறேன், இசை சௌந்தர்யன். ஒளிப்பதிவு ஆர்.வேல்,. எடிட்டிங் ராஜா முகமது. சண்டை மிரட்டல் செல்வா, . கலை கே.எம்.நந்தகுமார்,.  தயாரிப்பு விமலா ராஜநாயகம்.மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்,.

சூப்பர் ஹிட் பாடல்களுடன் படத்தை விரைவில் திரையில் பார்க்கலாம்” என்றார்.

மேலும் நடிகர்  ரவி மரியா, இயக்குனர்  சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர்  வாழ்த்தி பேசினார்கள்.

பத்திரிகையாளர் சங்க தலைவி கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

 

 

 

 

Related posts

“குடும்பஸ்தன்’” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

Jai Chandran

Hrithik’s magnetic Style Costume – Anaita Shroff Adajania

Jai Chandran

“Koozhaangal is the best dramatic feature film of this year’s New Directors New Film – Richard Brody

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend