..
குட்டி ஸ்டோரியுடன் கொரோனா சிக்னல்..
லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள மாஸ்டர் விஜய்யின் 64வது படமாக உருவாக்கி உள்ளது. ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போகும்.
இந்நிலையில் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் பட ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். கொரோனாவினால் வீட்டிலிருக்கும் மாஸ்டர் ஸ்டார்களை மாளவிகா வீடியோ கால்களில் தொடர்புகொண்டு பேசினார். விஜய், அனிருத் உள்ளிட்டவர்களிடம் அவர் பேசினார். என்ன பேசினார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை ஆனால் மாளவிகா வெளியிட்டுள்ள மெசேஜில் ப்ராப்ளம் வில் கம் அண்ட் கோ… கொஞ்சம் சில் பண்ணு மாப்பி என்று மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடலை பதிவு செய்திருக்கிறார்.
கொரோனோ சோசியல் டிஸ்டன்சிங் என ஒதுங்கியிருந்து பேசுவதுபற்றிய விழிப் புணர்வுக்கான உரையாடலாக இது அமைக்கப்பட்டிருந்தது.
vijay and master team practice social distancing: malavika mohanan