வரும் 7ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு..
குடிமகன்கள் ஹேப்பி..
கொரானா ஊரடங்கில் மக்கள் வேலை இழந்து வருமானம் இன்றி சிரமத்துக்கு உள்ளானது ஒருபக்கம் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அதேபோல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் ’குடிமகன்கள்’ பெரும் சிரமத்துக்குள்ளாகினர். சில இடங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் தொடங்கியது அதை போலீஸார் கண்டுபிடித்து தடுத்து நடவடிக்கை எடுத்தனர். டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கும் என்று காத்திருந்த குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வரும் 7ம் தேதிமுதல் கடைகள் நிபந்தனைகளுடன் இயங்க உள்ளது.
கொரானா தொற்று ஊரடங்கால் தடை செய்யப்படாத இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கடைகள் திறக்கப்படும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியது முக்கியம். கடைக்கு அருகில் 5 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது. ஒவ்வொரு நபரும் 6 அடி தூரம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஆனால் டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி இல்லை என அரசு கூறியிருக்கிறது.
அரசின் இந்த அறிவிப்பால் குடிமகன்கள் ஹேப்பி அடைந்திருக்கின்றனர். 7ம் தேதி டாஸ்மாக் கடைப்பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
#TASMAC