Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர்..

ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது.

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்க டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

ஹீரோ அறிமுகத்தை தவிர்த்து,“பெத்தி” டிரெய்லர் ஒரு விரிவான கிராமத்து உலகத்தை முன்வைக்கிறது. தீரா உழைப்பு, போராட்டம் மற்றும் விளையாட்டின் மீதான தீராத காதல் ஆகியவற்றால் நிரம்பிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், “பெத்தி” என்ற கதாபாத்திரம் பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக வருகிறார். கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் என எந்த விளையாட்டாக இருந்தாலும், தனது உடல் வலிமை மற்றும் கடின உழைப்பால் வாழ்வாதாரம் ஈட்டும் மனிதராக அவர் காட்சியளிக்கிறார். குழந்தைகளின் அன்பையும், கிராம மக்களின் மரியாதையையும் பெறும் அவரது வளர்ச்சி, குறிப்பாக ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஜமீன்தாரின் பொறாமையை தூண்டுகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா உருவாக்கிய இந்த பிரம்மாண்ட உலகம் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் தெரிகிறது. டிரெய்லர் முழுவதும் இதயத் துடிப்பைப் போல தடதடவென ஓடுகிறது – அமைதியான தருணங்களில் மென்மையாகவும், ஆக்ஷன் காட்சிகளில் இடியென வெடிப்பதுபோலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் உண்மையான மற்றும் பரந்த உலகத்திற்குள் இழுக்கப்படுகிறார்கள். வழக்கமான விளையாட்டு படங்களின் பாணியை பின்பற்றாமல், “பெத்தி” தனது விளையாட்டு காட்சிகளில் பெரும் தீவிரத்தையும் பரபரப்பையும் உருவாக்குகிறது. ரயில் நிலைய மேடைகளில் நடக்கும் மாபெரும் மோதல்கள், இயற்கையை மீறும் அளவிலான ஸ்டண்ட்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆகியவை விளையாட்டும் உயிர் பிழைப்பும் ஒன்றாக கலந்த உலகத்தை சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக கிரிக்கெட் மற்றும் மல்யுத்தத்தை இணைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு அசாதாரண காட்சி உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது.

ராம் சரண், மிகவும் கடினமான உடற்திறன் பயிற்சியுடன், ஒரு வலிமையான விளையாட்டு வீரராக காட்சியளிக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்க வெளிச்சங்களின் கீழ் பேட்டை சுழற்றும் தருணங்களிலிருந்து, சேறு கலந்த  மல்யுத்தப் போட்டிகளில் மிரட்டலாக மோதும் காட்சிகள் வரை, “பெத்தி”யாக அவர் முழுமையாக மாறியிருப்பது தெரிகிறது. உடல் மொழியிலும், உணர்ச்சிகளிலும் ஆழமான மாற்றத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.

ஜான்வி கபூர் தனது கதாபாத்திரத்தில் அழகான நளினத்தையும், பாரம்பரிய கவர்ச்சியையும் கொண்டு வந்துள்ளார். மேலும் சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி உள்ளிட்ட பலரும் கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் தோன்றுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக “பெத்தி” இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை மறுபரிசீலனை செய்யும் படமாகத் தெரிகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உருவாக்கிய கிராமப்புற உலகம் இயல்பும் நுணுக்கமும் நிறைந்ததாக உள்ளது. ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு காட்சிகளை வண்ணமயமான நிறங்களுடனும், பரந்த ஃப்ரேம்களுடனும், உயிரோட்டமிக்க கேமரா இயக்கத்துடனும் பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை, உணர்ச்சிகளையும் ஆக்ஷன் தருணங்களையும் மேலும் உயர்த்துகிறது.

படத்தின் தயாரிப்பு தரம் சர்வதேச அளவுக்கு இணையானதாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் பெரிய திரைக்காக செதுக்கப்பட்டதுபோல் அமைந்துள்ளது. சமீப காலங்களில் வந்த எந்த டிரெய்லரையும் விட மாறுபட்டதாக மிக அற்புதமானதாக  இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. இதனால், இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது

*நடிகர்கள் :*
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா

*தொழில்நுட்பக் குழு :*
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Related posts

மை லார்ட் (பட விமர்சனம்)

Jai Chandran

டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட “சிலந்தி”!!

Jai Chandran

RadheShyam to stick to festive release date of 14th Jan, 2022

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend