மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்
பிரதமர் மோடி அறிவிப்பு
புது டெல்லி, ஏப் :
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இன்று 14ம் தேதி முடிவதாக இருந்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது மோடி கூறியதாவது:
கொரோனா பரவலை தடுக்க சரியான நேரத்தில் இந்தி யாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வல்லரசு நாடுகளை காட்டிலும் இந்தியாவில் வைரஸ் நோய்த் தொற்று கட்டுப்ப டுத்தப்பட்டுள்ளது.
21 நாள் ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது
கொரோனா வைரஸ் பரவலை மேலும் கட்டுக்குள் கொண்டுவர வரும் மே 3ம் தேதிவரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
ஏப்ரல் 20-ம் தேதிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படும். பின்னர் சில தளர்வுகள் கொண்டு வரப்படும் இதுபற்றி விதிமுறைகள் நாளை சொல்லப்படும்.
ஏழைகளின் நிலைமையைக் கவனத்தில் வைத்து இத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு மோடி தெரிவித்திருக்கிறார்.
#Modi Announced: Coronavirus lockdown till May 3.
#India Lock Down
#மோடி #மே 3 வரை ஊரடங்கு