தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் தலைமை யிலான கூட்டணி தமிழகத் தில் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைகிறது. அவருக்கு தேசிய தலைவர் கள் வாழ்த்து தெரிவித்தி ருக்கின்றனர்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் பரூக் அப்துல்லா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்ரே, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி, கேரளா முதல்வர் பினராய் விஜயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்கள் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
தமிழக தேர்தலில் மகத்தான வெற்றி அளித்த தமிழக மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்
வாழ்த்து தெரிவித்த மோடிக்கு மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக் கிறார். அதில் தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.