முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம்..
கொரோனா கட்டுப்பாடு புதிய விதிமுறைகள்..
சென்னை மே 2:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமயில் இன்று அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பின்னர் முதல்வர் அறிவித்தார்.
கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். ஐ டி நிறுவனங்களில் 10 சதவிகித பணியாளர்கள் மட்டுமே பணியாற்றலாம்.
அத்தியாவசிய பொருட்கள் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி.
சலுயூன்கள் தவிர கட்டுமானப்பொருட்கள், சானிடைசர், எலெக்ட்ரிக்கல் போன்ற தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
பிளம்பர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக் தச்சர் போன்ற சுயதிறன் பணியாளர்கள் மாநகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம்அனுமதி பெற்றுக் கொண்டு பணியாற்றலாம்
தமிழ்நாட்டின் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் எல்லா தொழிற்சாலைகள் செயல்படலாம். நகரப் பகுதிகளில் தொழிற் பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க கூடாது.
இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகளுடன் கூடிய விதிமுறைகளை முதல்வர் அறிவித்தார்.
#TM Ministorial meeting