தமிழக முதல்வராக மே 7ம் தேதி பதவி ஏற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. முகஸ்டாலின் அவர்கள் , நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!.
இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.