Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மத்திய அரசுக்கு புரட்சி திலகம் சரத்குமார் வேண்டுகோள்

மத்திய அரசுக்கு புரட்சி திலகம் சரத்குமார் வேண்டுகோள்..

பசியில் உயிரிழக்காமல் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றுக.

கோரனான ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் கோக்கணக்கான மக்கள் பசியால் உயிரிழக்காமல் மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று புரட்சிதிலகம் சரத்குமார் கூறி உள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் இல்லங்களில் இருக்கும் சூழலில் மின் உபயோகம், சிலிண்டர், அத்தியாவசியமான உணவு மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொருளாதாரத்தை மக்கள் முற்றிலும் இழந்து இருப்பது நிதர்சனம். பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடும் நாளினை தற்சமயம் வரை துல்லியமாக கணிக்க முடியவில்லை. என்றாலும் வாழ்வாதாரம் இழந்த பல கோடி மக்கள் பசியால் உயிரிழக்கும் துரதிஷ்ட நிலை உருவாகி விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற் கொண்டு பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

தற்சமயம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது என்பதால் 230 கோடி மக்களின் வாழ் வாதார தேவையை பூர்த்தி செய்திட அத்தியாவசிய மற்ற திட்டங்களுக்காக 2020-21 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூபாய் 30, 42, 230 கோடி நிதியிருந்து மக்களின் பசி, வாழ்வாதார தேவையை பூர்த்தி செய்திட அத்தியாவசியமற்ற திட்டங்க ளுக்கான செவினங்களை இயன்ற வரை குறைத்து கிடைக்கப்பெறும் நிதியினை மக்களுக்கு வழங்கி அரசு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளான பாதுகாப்பு துறை, பொதுத்துறை ரயில்வே துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, ஊரக வளர்ச்சித்துறை நிதியினை பயன்படுத்தலாம்.
அந்த நிதியை ரேஷன் அட்டைதாரர் களுக்கு மட்டும் அல்லாமல் இந்திய நாட்டில் உள்ள சுமார் 30 கோடி குடும்பத்தினருக்கும் இரண்டு மாத வாழ்வாதார தேவைக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் அதேபோல் மாதம் 20 கிலோ வீதம் அரிசி கோதுமை இரண்டு மாதத்திற்கு இலவசமாக பொருட்களையும் வழங்கி மத்திய அரசு உதவி செய்தால் மக்களின் மன அழுத்தம் குறைந்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இந்திய தேசத்தின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தாலும் மக்களுக்கு பசி வராமல் தடுத்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரே மருந்தாக நிவாரண உதவி மட்டுமே இருக்க முடியும் மக்களின் தற்சமய வாழ்வாதார தேவை பூர்த்யானால் போர்க்காலத்தில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு அமல்படுத்தி மக்கள் வீட்டுக்குள் இருப் பதை கட்டாயமாக்கி நோயை கட்டுக்குள் வைப்பதற்கான தீவிர முயற்சியும் பரிசோதனைகளையும் அரசு எளிதாக மேற்கொண்டு கொரோனானாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் கட்டுப்பாடு பணிகளுக்கு மாற்றப்பணிகளுக்கு பதிவு செய்துள்ள முன்னாள் ராணுவத்தினர் சுமார் 4.5 லட்சம் வீரர்களை பயன்படுத்தவும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதன் வாயி லாக விரைவில் நோய் தாக்குதலில் இருந்து நாம் விடுபட முடியும். தற்
தற்போதைய கடினமான சூழலை கடந்து இந்திய தேசம் இயல்பு நிலைக்கு திரும்பும் நாளில் மக்கள் அயராத உழைப்பின் அளித்து சுய பொருளாதார முன்னேற்றத்திற்கும் சீரமைப்புக்கும் ஒன்றுபட்டு செயலாற்றும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன் எனது கருத்தை பதிவு செய்துள்ளேன்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

#sarathkumar request central government
#samathuva makkal katchi

#சரத்குமார் #சமத்துவ மக்கள் கட்சி

Related posts

Vishal and SJ Suryah starrer ‘Mark Antony’ commences shooting

Jai Chandran

’கமல்ஹாசன் 232’ படத்தை இயக்கும் ’மாஸ்டர்’ இயக்க்குனர் லோகேஷ் கனகராஜ்,.. ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Jai Chandran

இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend