மணிரத்னத்தின் உதவி இயக்குனர் குறும்படத்தில் லீலா சாம்சன்..
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராம் மகேந்திரா ‘மனம்’ என்ற குறும்படம். தயாரித்து இயக்கியுள்ளார். 40 நிமிடங்கள் ஓடும் இதில் லீலா சாம்சன், பரணிதரன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லீலா சாம்சன்,, ஓகே கண்மணி படத்தில் ரசிகர்களைக் கவர்ந்தவர். இக்குறும்படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: மணிரத்னம் சார் இயக்கத்தில் ”ஓகே கண்மணி’ படத்தில் நடித்துக்கொண்டி ருந்தபோது அதில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராம் மகேந்திரா எனக்கு அறிமுகமானார். மனம் குறும்படத்தின் கதையை அவர் எப்போது உருவாக்கினாரோ தெரியாது, திடீரென ஒருநாள் என்னிடம் இதில் நடிக்க முடியுமா? என்று கேட்டார். அனுதாபம் கலந்த அதேசமயம் ஒரு நல்ல கருத்தும் சொல்கிற கதையின் கரு ரொம்பவே பிடித்திருந்தது. மிகக் குறைந்த ஆட்களுடன் மிக நேர்த்தியாக இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார். ஒருவேளை இந்த கதாபாத் திரத்தில் அவர் எனக்கு முன் யாரையாவது நினைத்து வைத்திருக்கலாமோ என்னவோ..?ஆனால் இந்த கேரக்டர் என்னைத் தேடி வந்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. இது ஒரு பெரிய குறும்படமாக உருவாகும் என படப்பிடிப்பு சமயத்தில் எனக்கு தெரியாது.
கிட்டத்தட்ட பத்து நாட்கள் படப்பிடிப்பில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி னார்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவது போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இயக்குநர் ராம் மகேந்திரா உள்ளிட்ட படக்குழுவினர் செயல்பட்டனர். அதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. மன்னிக்கும் மனம் வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளைப் பற்றி புரிந்துகொள்ளவும் வேண்டும். இதுதான் குறும்படம் சொல்லும் சேதி. இந்தசமயத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை பார்த்தீர்களா..? இந்த கோவிட்-19 பாதிப்பால் அவர்களுக்கு நாம் உதவி செய்ய நினைத் தாலும் முடியவில்லை. நிறைய பேருக்கு உதவிகள் போய்ச் சேரவில்லை. ரொம்ப சோகமான சூழ்நிலை இது.
இதேபோல மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சோகமான சூழல் இருக்கும். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த குறும் படம் அதைத்தான் உணர்த்துகிறது.
இவ்வாறு லீலா சாம்சன் கூறினார்.
#மணிரத்னம் #ராம்மகேந்திரா #மனம்
#Manirathna Assitant Raammhendra’s Short Film Manam #Leela Samson