Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பளர் பாபு ராஜா மரணம்..

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய பாபு ராஜாஎன்கிற பாபா பக்ருதீன்  இதய கோளாறு காரணமாக வடபழநி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவருக்கு 10 சதவீதம் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ மனையில் பெட் வசதி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில், நேற்றிரவு மரணமடைந்து விட்டார்.
அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், ஜாவித் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
53 வயதாகிய பாபுராஜா, தனது இரு மகன்களை வைத்து ‘திருப்பதி சாமி குடும்பம்’ என்ற படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அரசு, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார்.
அவரது உடல் நேரடியாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக அவரது மகன் ஜாகின் அஷ்ரப் தெரிவித்தார்.

Related posts

Kida gets selected in the Indian Panorama category

Jai Chandran

இயக்குனர் டி..பி.கஜேந்திரனிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்

Jai Chandran

“அக்கா குருவி” மாதிரி படங்கள் வரவேண்டும்: இளையராஜா வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend