Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பொங்கலுக்கு ரிலீஸாகும் பிரபு சாலமனின் ‘காடன்’

 

ராணாவுடன் 20யானைகள் நடித்தபடம்

கும்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன் அடுத்து யானைகளை வைத்து இயக்கும் படம் காடன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்கி உள்ளார்.
யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகி யுள்ள  ‘காடன்’ படத்தில்  நடிப்பதற்ககாக தனது  முழு உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா.
ஈராஸ் நிறுவனம் தயாரித் துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப் பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள்  நடைபெற்றது. பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட் கள் படப்பிடிப்பு நடை பெற்றது. பின்பு, புனேவில் உள்ள சதாரா,  மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
பெரும் காடுகள், மலைகள் என கஷ்டப்பட்டு பல காட்சி களை படமாக்கியுள்ளது படக்குழு. அவை அனைத்து மே திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் பிரம்மாண் டம் தெரியும். திரையரங்கில்  மட்டுமே வெளியாகும்.
இந்தப் படத்துக்காக காடு களின் இயற்கை ஒலி படத் துக்கு முதுகெலும்பாக இருப்ப தால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ‘காடன்’ படத் துக்கு ஒலியை வடிவ மைத் துள்ளார். ‘பாகுபலி’ படத்துக் குப் பிறகு ராணா 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள் ளார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள் ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.
இந்தப் பிரம்மாண்ட தயாரிப் பை 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர ஈராஸ் நிறுவனம் முடிவெடுத் துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளி லும் ஒரே சமயத் தில் உலகமெங்கும் வெளியாக வுள்ளது.
ஈராஸ் நிறுவனம் தயாரிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியுள்ளார்  பிரபு சாலமன். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

புவன் எடிட்டிங் கவனிக்கி றார். ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சிவா சண்டை காட்சிகள் அமைக்கிறார். மயூர் அரங்கம் நிர்மாணிக்கிறார். சாந்தனு மொய்த்ரா இசை அமைக்கி றார், (இவர்  3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர்)
நிகில் முருகன் பி.ஆர்.ஓ.

pirabhu salaman directorial Kaadan Release on Pongal 2021
Kaadan. Pirabhu Salaman,Rana,
காடன், ராணா, பிரபு சாலமன்,

Related posts

சின்னத்திரை இயக்குனர் சங்க விழாவில் அமைச்சர் பங்கேற்பு

Jai Chandran

வெள்ளிமலை (பட விமர்சனம்)

Jai Chandran

Yash19 as Toxic – A Fairy Tale for Grown-ups

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend