கொரோனாவால் வேலை இழப்பு பிரச்னை..
கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல் படுத்தப்பட் டுள்ளதால் வேலை முடங்கி உள்ளது. ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்பபு உள்ளிட்ட அனைத்து விதமான பட வேலை களும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
திரைப்பட பெப்சி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு கடும் சிரமத் திற்கு உள்ளாகி இருக்கின்றனர். குடும்பம் நடத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து சினிமா நட்சத்திரங்கள் உதவி செய்யவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர். கே செல்வமணி அறிக்கை வெளி யிட்டார்.
இதையடுத்து நடிகர்கள் உதவி அறிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் ரூ 50 லட்சம், சூர்யா, கார்த்தி 10 லட்சம் சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய்சேதுபதி 10 லட்சம் வழங்கு வதாக அறிவித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் 150 மூட்டை அரிசி வாங்கி அளிக்கிறார். மேலும் பல நடிகர்கள் நிதி அளிக்கின்ற னர்.
#Coronavirus: Rajinikanth, Suriya, Karthi vijay sethupathi donate for Fefsi workers