Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

பரமபத விளையாட்டு சென்னை விநியோக உரிமையை வாங்கிய ‘அபிராமி’ ராமநாதன்

முதன் முறையாக ஆக்ஷன் நாயகியாக திரிஷா நடிக்கும் படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கிய ‘அபிராமி’ ராமநாதன்

திரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது, ‘பரமபத விளையாட்டு’ படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி வருகிறது. ஒரு இரவுக்குள் நடக்கும் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். திரிஷாவின் 60வது படமான இத்திரைப்படத்தை திருஞானம் இயக்குகிறார்.

இதில் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல். அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ் இமான் அண்ணாச்சி சோனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் வருகின்றது.

இதற்கிடையில், இப்படத்தைத் தன் குடும்பத்துடன் பார்த்த ‘அபிராமி’ ராமநாதன் சென்னை விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.

‘பரமபத விளையாட்டு’ இம்மாத இறுதியில் வெளியாகும்.

Related posts

நாட்படு தேறல் – தலைப்புப் பாடல் வைரமுத்து வெளியிட்டார்

Jai Chandran

விஜய் ஆண்டனி நடிக்க பாலாஜி கே குமார் இயக்கும் ‘கொலை’.*

Jai Chandran

ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள்!: கமல்ஹாசன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend