Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2020 !

நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் பத்து (10) ஆண்டுகள் நிறைவு விழாவினை தொடர்ந்து பதினோராவது (11) ஆண்டு திரைப்பட விழாவுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

உலகில் உள்ள பலதரப்பட்ட உலகத் திரைப்பட விழாக்களுக்கு மத்தியில்
எங்கள் தமிழுக்கும், தமிழர்களுக்கும், உன்னதமான கலைஞர்களை
உரிமையோடும், நேர்மையோடும் பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி வருகின்றோம்.

உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான அடையாளமாக, திரைக்களமாக
பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், வேற்று மொழித் திரைப்படங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழே போட்டியிட்டு
தகுதியுடையவர்கள் “தமிழர் விருதினை” பெற்றுக்கொள்வார்கள்.

உலகம் முழுவதும் வாழ்கின்ற திரைத்துறைக்கு கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல் தளமே நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2020 !

தமிழ் நாட்டில் வெளியாகும் முழுநீளத் திரைப்படங்களில் இருந்து 20 திரைப்படங்களை எமது(NTFF Committee) குழு தெரிவுசெய்து, நடுவர்களின் மதிப்பீட்டுக்குப்பின் தமிழர் விருது பெற்ற கலைஞர்களின் பெயர் விபரங்கள் 15.01.2019 அன்று வெளியாகும்.

ஏனைய பிரிவுகளில் திரையிடல் மற்றும் போட்டிக்குத் தெரிவாகும்
திரைப்படப் போட்டிகளுக்கான விண்ணப்ப அழைப்பிதழ் : 20.10.2019 தொடங்கி விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2020 நிறைவுபெறும்.

நோர்வே தமிழ் திரைப்பட விழாவின்(2020) போட்டிகளுக்கான பிரிவுகள் :
NTFF 2020 தமிழ் மொழி :
-குறும்படங்கள்
-முழுநீளப் படங்கள்
-காணொளிகள்
. ஆவணப்படங்கள்
-அனிமேஷன் படங்கள்

NTFF 2020 சர்வதேச மொழிகள் :
-குறும்படங்கள்
-முழுநீளப் படங்கள்
– காணொளிகள்
– ஆவணப் படங்கள்
– அனிமேஷன் மடங்கள்

Related posts

இயக்குனர் தாமிரா நினைவுகளை பிகிர்ந்த சீனு ராமசாமி

Jai Chandran

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றினார்

Jai Chandran

கணம் படக் குழுவுக்கு பாயாசம் செய்துபோட்ட அமலா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend