நிதி பற்றாக்குறையால் அரசு செலவுகள் குறைப்பு..
பொன்னாடை, பூங்கொத்துக்கு தடை..
சென்னை, மே :
கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் வகையில் அரசின் மொத்த செலவில் 20 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட் டுள்ளது
இனி அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் தவிர்க்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் அரசு செலவில் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. வெளிநாடு பயணத்திற்கும் அரசு செல்லவில் தடை செல்ல விதிக்கப்படுகிறது.
விளம்பர செலவகள் 25 சதவீதம் குறைக்கப்படும். அலுவலக தேவைகளுக்கு மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடங்கள் வாங்குவது 50 சதவீதம் வரை குறைக்க வேண்டும். மேலும் மதிய விருந்து மற்றும் இரவு விருந்துகள் தவிர்க்க வேண்டும்.
சுகாதாரம், தீயணைப்பு துறைக்கு மட்டுமே உபகரணங்கள் கொள்முதல்செய்ய அனுமதி உண்டு.
#TN Govt Reduced office expenses