கண்ணா லட்டு திண்ண அசையா ஹீரோ..
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுக மானவர் சேது. இப்படத்தில் சந்தானம், பவர் ஸ்ரார் சீனி வாசன் ஆகியோருடன் இணைந்து அவரும் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதையடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களிலும் நடித்தி ருந்தார். நேற்று இரவு 8.30 மணி அளவில் சேதுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36.
சேது தோல் சிகிச்சை டாக்டருக்கு படித்திருந்தார் இவர் மேற்படிப்புக்காக சிங்கப்பூர் சென்று படித்தார். லேசர் முறையில் தோல் சிகிச்சை மற்றும் உடல் அழகு அறுவை சிகிச்சை பயிற்சி பெற்ற அவர் சென்னையில் மருத்துவமனை கட்டி நடத்தி வந்தார். இதற்காக வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவ சாதனங்களை வரவழைத்து பயன்படுத்தினார்
அவரிடம் சில நடிகர், நடிகை களும் அழகு சிகிச்சை பெற்றனர்.
நடிப்பு, மருத்துவம் இரண்டிலும் கவனம் செலுத்திய சேது சமீப காலமாக மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2016ம் ஆண்டு சேதுவுக்கு உமா என்பவரை மணந்தார் இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
சேதுவின் மரணம் திரையுலகி னரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
#’Kanna Laddu Thinna Aasaiya’ Actor Sethu dies of cardiac arrest
#Actor Sandhanam Friend Sethu