நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1000 உதவிதொகை
.
அரசு தனி அதிகாரி அறிவிப்பு..
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக குழு கலைக்கப் பட்டு அரசு தனி அலுவலர் தலைமையில் சங்க நிர்வாகப் பணிகள் நடந்து வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படப் பிடிப்பு முடங்கியிருப்ப தால் சங்க உறுப்பினர்கள் வேலை யில்லாமல் பாதிக்கப்பட்டுள் ளனர் அவர்களுக்கு தலா ரூ 1000 நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக சங்க தனி அதிகாரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் (திரைப்பட நல வாரியத்தின் உறுப்பினர்கள் மட்டும்) கீழ் காணும் ஆவணங்களை 10 மற்றும் 11.4.2020 ஆகிய இரு தினங்களுக்குள் nsct2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப இயலாதவர்கள் 98656 03660 , 98417 65110 ஆகிய அலைபேசி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு போட்டோ, நகல் எடுத்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுகொள்கி றோம்.
தேவையான ஆவணங்கள்: 1.திரைப்பட நல வாரிய புத்தகத்தின் முதல் பக்கம்
2.வங்கி கணக்கு புத்தகத்தின்முதல் பக்கம் (அல்லது) காசோலை
3.நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை.
இவ்வாறு தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.
#Actor Associaton Members Each Gets Rs. 1000: Tamil Nadu Govt
#நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ஆயிரம்:தமிழக அரசு