Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா..

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூனுடன் ஜோடி சேர்கிறார் ராஷ்மிகா..
வெற்றி கூட்டணி 3வது முறையாக இனைகிறது
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவரும் இயக்குனர் சுகுமாரும் இணைந்து வழங்கிய ‘ஆர்யா’ மற்றும் ஆர்யா 2 ஆகிய இரண்டு தெலுங்கு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இதையடுத்து இதே கூட்டணி 3வது முறையாக இணைகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்துக்கு ”புஷ்பா” என பெயரிடப்பட்டிருக்கிறது,
மித்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்ஷெட்டி மீடியா தயாரிக்கிறது. இப்படத்தின் தொடக்கவிழா நடந்தது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று புஷ்பா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். முந்தைய படங்களில், அல்லு அர்ஜுன் , தேவி ஸ்ரீ பிரசாத் , சுகுமார் இணைந்து நிறைய ஹிட் ஆல்பங்களை கொடுத்திருக்கிறார்கள். அந்த கூட்டணியும் இதில் இணைந்திருப்பது பிளஸ்/
நவீன் யர்னேனி, ரவிசங்கர் .ஒய். தயாரிக்கின்றனர். லைன் தயாரிப்பாளர்: பாலா சுப்ரமணியம். இந்தியா முழுவதும் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

#Allu Arjun-Director Sukumaar Joined Hands Togeather Again
#Allu Arjun In Puspha #Rashmika Mandanna
#அல்லு அர்ஜூன் இயக்குனர் சுகுமார் இணையும் 3வது படம் புஷ்பா #ராஷ்கிகா மன்தன்னா

Related posts

Nikhil – Vijay Sri G’s Powder Audio and Trailer Launch Event

Jai Chandran

KaathadiMegam Audio Rights bagged by Starmusicindia

Jai Chandran

எடர்ணல்ஸ்:இந்திய திருமண காட்சிகள், ஏஞ்சலினா ஜோலி,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend