நடிகர் சங்கத்தினர் 1000 பேருக்கு ரஜினி உதவி..
நிவாரண பொருள் நாளை பெறலாம்..
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப் பட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.
இதுபற்றி நடிகர் சங்க தனி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் திரைப்படத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் நிதி யுதவி அளித்து வருகிறார் கள். அவர்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இச்சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க 1000 உறுப்பினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் துக்கு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சார் பாக மிகுந்த நன்றியினை யும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிவாரண பொருட்களை 25.04.2020 அன்று சாலிகிராமத்தில் அமைந் துள்ள செந்தில் ஸ்டூடியோ வளாகத்தில் காலை 6.00 மணி முதல் காலை 8.00 மணி வரை உறுப்பினர்கள் தங்களுடைய தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையுடன் நேரில் வருகை தந்து பெற்றுக்கொள்ளு மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உறுப்பினர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்று மாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரி அறிக்கையில் கூறியுள்ளார்.
#rajini helping helping hand to actor association
#ரஜினிகாந்த் #நடிகர்சங்கம்