அதிமுக. பாஜ, பா ம க கூட்டணி அமைத்து 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் முடிந்தன, ஏற்கனவே இக்கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது.
அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 தொகுதிகளும், பா ம கவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அந்த தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. போடிநாயகனூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் இன்று போடிநாயகனூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அங்கிருந்த ஜல்லிகட்டு காளைக்கு மாலை அணிவித்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.