நடிகர் ஹம்சவரதன் தமிழ் சினிமாவில் பிரபல நாயகன் இவர் தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பிரபல நடிகர் ரவிச்சந்திரன் மகன் என்பது நாம் அறிந்த விஷயம். ஹம்சவரதன் தற்போது நான்கு படங்களில் நடித்து வருய்கிறார் அதோடு சில படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார் .
நடிகர் ஹம்சவர்தன் நல்ல நடிகர் போல நல்ல குணம் படைத்தவர் ஏழைகளுக்கு மிகவும் உதவும் மனப்பான்மை கொண்டவர் அடிக்கடி அன்னதானம் ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவி செய்தும் வருபவர் . அதோடு மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர் குறிப்பாக சிவன் பக்தர் தொடர்ந்து திருவண்ணாமலை கோவில் செல்பவர். அங்கு செல்லும் போதெல்லாம் கோவிலுக்கும் அங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுப்பார். தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் விளக்கு ஏற்ற கிட்டத்தட்ட 15 லட்சம் விளக்குகள் வாங்கி கொடுத்துள்ளார. என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.