உடல்நலம் பாதிப்பால் காலமானார்
குடும்ப படங்களை இயக்கி தனக்கென ஒரு பாணியை வகுத்தவர் டைரக்டர், நடிகர் விசு. அவர் இன்று மாலை திடீரென்று காலமானார். அவருக்கு வயது 75.
இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விசுவின் நிஜ பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விசுவநாதன் ஆகும் அதை சுருக்கி விசு என்று வைத்துக்கொண்டார்
குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் வித்தியாச மான வேடத்தில் நடித்து தனது அடுக்கு மொழி வசனத்தால் மனதை கவர்ந்தவர் தொடர்ந்து மணல் கயிறு. சம்சாரம் அது மின்சாரம் என மறக்கமுடியாத பல படங்களை இயக்கி அளித்தார்.
கடந்த சில வருடங்களாகவே படங்கள் இயக்காமல் ஒதுங்கி இருந்தார் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
விசு 1945-ம் ஆண்டு பிறந்தார். இயக் குனர் கே .பாலச்சந்தரிடம் உதவி இயக்கு னராக பணியாற்றி பின்னர் இயக்குநராகி பல்வேறு வெற்றி படங்களை வழங்கினார். முன்னதாக மேடை நாடகம், தொலைக் காட்சித் தொடர் போன்றவற்றிலும் நடித்துள்ளார். மறைந்த விவுக்கு சுந்தரி என்ற மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
#Legendry Director-writer-actor Visu passes away