தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்துவந்த ஜெயலலிதா உடல் நலமில்லாமல் இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 4ஆண்டுகளாக ஆண்டு வந்தார். சட்டமன்ற ஆயுட்காலம் முடிவதையடுத்து புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக் கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.
திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம்தமிழர் கடசி என 5 முனை போட்டி நடக்கிறது இதில் நாம்தமிழர் கட்சி தவிர மற்ற பிரதான கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன . கடந்த பல நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்துவந்தது நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதை தையடுத்து நாளை ஏப்ரல் 6ம்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. 234 தொகுதிகளுக்கு 3, 998 போட்டியிடுகின்றனர். இதில் ஆண்கள் 3,585 பேர். பெண்கள் 411 பேர்.
தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட் டுள்ளன. இதில் 300 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும், 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதற்றமானவை எனவும் அடையாளம் காணப்பட் டுள்ளது.
வாக்குகுப்பதிவுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் இ ன்று அனுப்பிவைக்கப் பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 372 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுதப்படை மற்றும் உள்ளூர்போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசாரும் உள்ளனர். முன்னாள் ராணுவத் தினர், ஊர் காவல் படையினர், தீயணைப்பு படையினர், ஜெயில் வார்டன்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர். இவர்கள் 34 ஆயிரத்து 130 பேர் பணியில் உள்ளனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து 6 ஆயிரத்து 350 போலீசாரும் வரவழைக் கப்பட்டுள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 6 ஆயிரத்து 123 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள் ளார். சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத் தப்பட்டுள்ளன
previous post