தமிழகம்: கொரோனா பாதிப்பு 74 ஆனது
சென்னை மார்ச்.
கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. தடையை மீறி வெளியில் வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்துவதுடன் பலர் மீது வழக்கு சிறு தண்டனை கள் வழங்கி வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணி ஒரு பக்கம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டாலும் வைரஸ் தொற்று பரவிய வண்ணம் இருக்கிறது. நேற்று மதியம் வரை 50பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் மாலையில் அது 67 ஆக உயர்ந்தது. இன்று மேலும் 7பேருக்கு தொற்று அறியப்பட்டு 74பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
#Tamilnadu registers 74 corono vairus cases