24 வயது வாலிபருக்கு தொற்று உறுதி..
சென்னை, மார்ச் :
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைள் எடுத்து வருகின்றன. 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.விமான நிலையம் மற்றும் விடுகளில் சோதனை கள் மேற்கொள்ளப்பட்டன.
பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. வெவ்வேறு விமான நிலைகளில்
2 லட்சத்து 9 ஆயிரத்து 163 பேருக்கு முதற்கட்ட பரிசோ தனை நடந்தது. வீடுகளில் 15,298 பேர் தனிமைப்படுத்தப் பட்டு உள்ளனர். 43 விமான பயணிகள் தனி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் சென்ற 23ந்தேதி 12 பேர் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது நேற்று முன்தினம் ஒரே நாளில் சென்னையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்ப 18 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் நேற்றைய பரிசோதனைமுடிவில் சேலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரும் கடந்த 22ந்தேதியில் தனிமைப்படுத்தபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த தகவலை தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் டிவிட்டரில தகவல் வெளியிட்டுள்ளார்.
உள்ளார்.
இதுவரை கொரோனா தொற்று 26 ஆக இருந்த நிலையில், துபாயிலிருந்து திருச்சி வந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை செய்த தில் உறுதியானது. இதை யடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தி ருக்கிறது. இந்தியா முழுவதும் 315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட் டுள்ளது.
#Coronavirus Outbreak Updates: 315 cases confirmed in India
#coronao vairas :27 cases confirmed in Tamil nadu