டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆன ‘மலையன்’ பட பாடல்..
கரண் நடித்தபடம்..
நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். இப்படம் 2009ம் ஆண்டு வெளியானது
.
இப்படத்தின் கதை சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது, தமிழக அரசின் மூன்று விருதுகளை இப்படம் பெற்ற து,
சிறந்த நடிகர் கரண்
சிறந்த குணச்சித்திர நடிகர் சரத் பாபு
சிறந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்.
த்ரி ஷ்ம் புரொடக்ஷன் ஆர்.பாலசுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தை தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். படத்தின் இயக்குனர் எம் பி. கோபி
இப்படத்தில் இடம் பெற்ற “பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா” என்ற பாடல் தற்போது டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தீனா இசையில் , சினேகன் இப்பாடலை எழுதியிருந்தார்
கொரோனா பாதிப்பில் நாடு திரும்ப முடியமால் வெளி நாட்டில் இருக்கும் தன்னு டைய கணவனை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்தபடியும், வெளிநாட்டில் இருக்கும் காதலனை நினைத்தும், நிச்சயதார்த்தம் முடிந்த பெண்கள் தன்னுடைய வருங்கால கணவனை நினைத்து உருகியும் டிக்டாக் செய்கி றார்கள். இதுதான் இப்பாடல் ட்ரெண்டிங் ஆக காரணம்.
#Eleven Year Old MALAIYAN Tamil Movie Song Trending in Tiktok
#Karan #Sarath Babu
#Kanja karuppu #Snekan
#மலையன் #கரண்
#சரத் பாபு #கஞ்சா கருப்பு #சினேகன்