சிம்பு திருமண தகவலால் பரபரப்பு..
டி.ராஜேத்தர், உஷா விளக்கம்…
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வுக்கு லண்டன் பெண்ணை திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா இணைந்து விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது : எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்தி ரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தி யை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப் போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கி றோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.