‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி…’ என்று விக்ரம் நடித்த தூள் படத்தில் பாடல் பாடி அறிமுகமானவர் பரவை முனியம்மா. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2 மாத்துக்கு முன் அவர் உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிறகு வீடு திரும்பினார். வீட்டிலிருந்தபடியே மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் முனியம்மா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.
மதுரை மாவட்டம் பரவை என்று கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் பெயருக்கு முன்னால் பரவை என்றஅவரது ஊர் பெயர் ஒட்டிக்கொண்டது சினிமா பாடல்களுக்கு முன் ஏராளமான நாட்டுப்புற பாடல்கள் ஐயப்ப பக்தி பாடல்கள் பாடி உள்ளார் . பரவை முனியம்மா கடைசியாக மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வராததால் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. பரவை முனியம்மாவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. இவர் கடைசியாக மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார்.
பரவை முனியம்மாவுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் செந்தில்குமார் மனவளர்ச்சி குன்றியவர். முனியம்மா இறந்துவிட்ட நிலையில் அவருக்கு தமிழக அரச வழங்கி வந்த உதவித்தொகையை மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் அரசை கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
Actor-Singer Paravai Muniyamma passes away