Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

சாதனையாளர்களுடன் ஏழை ஏளிய மாணவர்களின் ராம்ப் வாக் ஷோ – ரெயின்ட்ராப்ஸ் ஏற்பாடு

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு கலை சார்ந்த நிகழ்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மக்கள் நெஞ்சங்களில் விதைத்து வருகிறது. இந்த அமைப்பு முதன்முறையாக நேச்சுரல் சலூன் மற்றும் சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏழை ஏளிய மாணவர்களுக்கான பேஷன் ராம்ப் வாக் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் தினக்கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆஸ்கார் வென்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா தலைமை வகித்தார். வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்டில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோ ராம்ப் வாக் நிகழ்ச்சியில் சேவாலயா, செஸ், சீர்ஸ் பெண்கள் காப்பகம், ஆனந்தம் இல்லம் மற்றும் ரெய்ன்ட்ராப்ஸ் அமைப்பின் கல்வி உதவித்தொகை பெற்றுவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 ஏழை, எளிய மாணவர்கள் கலந்து கலந்துகொண்டனர். இவர்களுள் ஒரு பார்வைத்திறன் குறைவற்ற மாணவியும், திருநங்கையும் இடம்ப்பெற்றனர். ராம்ப் வாக் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான சிகை அலங்காரத்தை நேச்சுரல் சலூனும், பேஷன் உடை அலங்காரத்தை ஸ்டைல் பொட்டிக்’கும், மேடை நடை பயிற்சியை கருண் ராமன் அவர்களும் அளித்தனர்.

நிகழ்ச்சியின் முதல் சுற்றில் 25 மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இரண்டாவது சுற்றில் யாவரும் சமம் என்ற நோக்கில் மற்ற மாணவர்களுடன் ஏழை எளிய சிறுவர்கள் கை கோர்த்தபடி மேடையில் நடை போட்டனர். இறுதிச் சுற்றில் இருவரும் சாதனையாளர்களுடன் ராம்ப் வாக் சென்றனர். இந்த ஏழை ஏளிய மாணவர்களின் 2020–21-ம் ஆண்டுக்கான கல்விச் செலவு மற்றும் சென்னையில் இருந்து கோவைக்கு முதன் முதலாக விமானத்தில் சென்று வருவதற்கான ஒரு நாள் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் வர்க்க பேதங்களை மறக்கச் செய்து ஏழைச் சிறுவர்கள் தாங்கள் சிறந்தவர்கள் என்பதை உணர அவர்களது நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தல், கல்வி உதவி வழங்குதல் மற்றும் சாதனையாளர்களுடன் குழந்தைகள் கை கோர்த்து நடக்கும் போது குழந்தைகள் வாழக்கையில் வெற்றி பெற புது உத்வேகம் பெற முடியும் என்பதேயாகும். அகத் தூண்டுதல் என்பது கற்றுக் கொடுப்பதல்ல பிறரிடம் இருந்து கற்றுக் கொள்வதாகும். சபையர் என்ற புதிய நிறுவனம் இந்த நிகழ்சிக்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்துருந்தது.

ரெயின் ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனரும், இந்நிகழ்ச்சியின் படைப்புத் தலைவருமான அரவிந்த் ஜெயபால் கூறுகையில், குழந்தைகள் தான் நமது பொக்கிஷம், அவர்கள் தான் நம்முடைய எதிர்காலம். ராம்ப் வாக் ஷோ மற்றும் விமான பயண அனுபவம் போன்றவை குழந்தைகளுக்கு வாழ்நாள் அனுபவமாக இருக்கும், இந்த நிகழ்ச்சியானது குழந்தைகளுக்கு மனித நல்லியல்புகளை அடையாளம் காட்டுவதோடு, உலகத்தை உயரத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் என ரெயின்ட்ராப்ஸ் நம்பிக்கை கொள்கிறது என்று கூறினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 107 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமாரதா திம்மக்கா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரெஹானா, பாவதாரணி, இயற்கை விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில்,நடிகைகள் வடிவுக்கரசி, பிக் பாஸ் அபிராமி, பாத்திமா பாபு, குழந்தைகள் மேம்பாட்டு சேவை இயக்குனரும் பரதநாட்டிய கலைஞருமான கவிதா ராமு இ.ஆ.ப, வண்டலூர் உயிரியல் பூங்காவின் துணை இயக்குனர் சுதா ராமன், தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி, இந்திரா ப்ரொஜெக்ட்ஸ் புபேஷ் நாகராஜன், பின்னணி பாடகர் வேல்முருகன்
மற்றும் முன்னணி பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் பலரும் குழந்தைகளுக்கான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Related posts

தமிழில் நடிக்க தயார்: கப்ஜா விழாவில் உபேந்திரா

Jai Chandran

சிம்புவின் ‘பத்துதல’ பட டீசர் வெளியீடு

Jai Chandran

தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு பாரதிராஜா பாராட்டு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend